எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் உள்ளன: மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த புதின்

#Putin #Weapons
Prasu
1 year ago
எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் உள்ளன: மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த புதின்

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. 

தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. 

இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றன. 

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 

2-ம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷிய ராணுவ அணி திரட்டல் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நாட்டு மக்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி வாயில் நிகழ்த்திய உரையில், 'ரஷிய ராணுவத்திற்கான அணி திரட்டல் இன்று முதல் தொடங்குகிறது. 

ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சி பெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள்