இன்றைய வேத வசனம் 24.09.2022: அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
ரஷ்ய தேசத்தில் ஸ்டாலின், லெனின் என்ற புகழ்வாய்ந்த இரண்டு தலைவர்கள் இருந்தார்கள்.
இதில் ஸ்டாலினை குறித்து வேடிக்கையான கற்பனை கதை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது.
இவர் தீவிரமான கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர். ஒரு நாள் இவர் ஒரு சொப்பனம் கண்டார்.
அந்த சொப்பனத்தில் அவருக்கு பரலோகத்தையும், நரகத்தையும் பார்க்க நேர்ந்தது.
அப்பொழுது பரலோகம் அவ்வளவு ஒன்றும் நன்றாக இலலை சாதாரணமாகத் தான் இருந்தது.
ஆனால், சாத்தானோ மிக ஆழகாக இருந்தான். பிறகு சாத்தான் நரகத்தை காண்பித்தான்.
நரகம் மிக அழகாக இருந்தது. அப்பொழுது ஸ்டாலின் உலகத்தில் அனைவரும் பரலோகம் தான் மிக அழகாக இருக்கும் நரகத்தில் அக்கினி தான் இருக்கும் என்று பொய் சொல்லி கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தார்.
அப்பொழுது சாத்தான் நானே உங்களை அழைத்துக் கொண்டு காண்பித்து விட்டேன். எது நன்றாக இருக்கிறது என்று பார்த்துவிட்டீர்கள் அல்லவா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான்.
சொர்பனம் கலைந்து அவர் எழுந்து உட்கார்ந்தார்.
சில வருடங்களுக்கு பிறகு இவர் மரித்ததும் அவரது ஆத்துமா பரலோகத்திற்கு போகிறது.
பரலோகத்திற்கு அந்த ஆத்துமா போகும் பொழுது அங்கு இருந்த தூதர்கள் இந்த பெயருக்கு பரலோகத்தில் இடமில்லை நீங்கள் நரகத்திற்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.
அப்பொழுது சாத்தான் வந்து அந்த ஆத்துமாவை இழுத்துக் கொண்டு போகிறான். சாத்தானை பார்க்கவே மிகவும் கொடூரமாக இருந்தான்.
அப்பொழுது ஸ்டாலின் ஆத்துமா சாத்தானை பார்த்து ஐயோ நீ ஆள் மாறி வந்துவிட்டாய். வேறு யாரோ நீ! அன்றைக்கு நான் பார்த்த சாத்தான் மிகவும் அழகாக இருந்தான் என்று புலம்பினார்.
அதற்கு சாத்தான், இல்லை நீ வா அன்று நீ பார்த்தது என்னை தான் அவன் தான் நான் என்று சொன்னவுடன் இவருக்கு ஒரு சிறு நம்பிக்கை வந்தது. நான் பார்த்த நரகம் நன்றாக தானே இருந்தது அங்கே போய்விடலாம் என்று நினைத்தார்.
நரகத்திற்கு சென்று பார்த்த பொழுது இவரால் தாங்க முடியவில்லை. ஐயோ!! கொடுமையாக இருக்கிறதே நான் எப்படி இந்த கொடுமைக்குள் இருப்பேன். இது நரகம் அல்ல நீ பொய் சொல்கிறாய் என்னை உண்மையான நரகத்திற்கு அழைத்துக்கொண்டு போ என்று சாத்தானிடம் கதறினார்.
அப்பொழுது சாத்தான், ஸ்டாலினே நீ முதல் முறை நீ சுற்றுலா பயணியாக வந்தாய். இப்பொழுதோ நிரந்தரமாய் தங்குவதற்காய் வந்திருக்கிறாய். இது தான் உண்மையான நரகம் என்று அவரை நரகத்தில் தள்ளினான்.
ஆம் நண்பர்களே, இது வேடிக்கையான கற்பனை கதை என்றாலும், எவ்வளவு பெரிய உண்மையை கூறுகிறது பாருங்கள்.
உலகத்தில் நிறையபேர் நரகம் தான் மிக நன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். பிசாசு தீமையை வஞ்சனையாக நல்லது போல காட்டுவான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நரகத்தில் ஒருபோதும் இளைப்பாறுதல் இருக்காது. நித்திய இளைப்பாறுதல் வேண்டுமென்றால் பரலோகத்தில் ஆண்டவருடைய பிரசனத்தில் மாத்திரமே கிடைக்கும்.
எனவே, இளைப்பாறுதல் தரும் இயேசு கிறிஸ்துவை தேடி ஓடுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையில் மாத்திரமல்ல மறுமையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலை கட்டளையிட்டு உங்களை சந்தோஷப்படுத்துவார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
மத்தேயு 13:42
அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.