அரச ஊழியர்களில் கட்டாய ஓய்வு வயதை நீடிக்க அமைச்சர் யோசனை
Mayoorikka
2 years ago
அரச ஊழியர்களில் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தினால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுமார் 300 விசேட வைத்திய நிபுணர்கள் இவ்வருட இறுதியில் ஓய்வுபெற நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்கது.