புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து: எதிர்க்கட்சித் தலைவர்

Prathees
1 year ago
புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து:   எதிர்க்கட்சித் தலைவர்

சுகாதாரத் துறைக்கு போதுமான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது.

மேலும், புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமான கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகளினால் அதிகளவான புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், அதனை நிறைவேற்றாதது வருத்தமளிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 19/2022 என்பதும் சுகாதாரத் துறையுடன் தொடர்புடையதாக இருந்தால், தற்போதைய மனிதவள முகாமைத்துவம் மேலும் சிக்கலுக்குள்ளாகலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.