நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Kanimoli
1 year ago
நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனை போன்று ஜாமீனில் விடுவிக்க கோரி
   இந்த நிலையில் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 142 வது சட்டப்பிரிவின் மூலமாக தங்களையும் விடுதலை செய்யவும், பேரறிவாளனை போன்று தங்களையும் ஜாமீனில் விடுவிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரது மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது