பூமியை நோக்கி வந்த சிறுகோள் மீது விண்கலம் மோதி திசை திரும்பியது- நாசாவின் சோதனை வெற்றி

Prasu
1 year ago
பூமியை நோக்கி வந்த சிறுகோள் மீது விண்கலம் மோதி திசை திரும்பியது- நாசாவின் சோதனை வெற்றி

பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

சிறு கோள்களின் சுற்றுப் பாதையானது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 3 கோடி மைல்களுக்குள் வர சாத்திய கூறுகள் உள்ளது. 

அவற்றை பூமிக்கு அருகே கொண்டு வரமுடியும். பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது. 

இந்த திட்டத்திற்கு டார்ட் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இரட்டை சிறுகோள் திசை திருப்பல் சோதனை என்பதாகும். 

சூரியனை சுற்றி வரும் சிறிய கோள்கள் பூமியை தாக்குவதில் இருந்து தடுக்க இது ஒரு முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது.