தலைமன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது

Prasu
2 years ago
தலைமன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படையினரால் தலைமன்னார், வெலிபர பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்வதற்கு முயன்ற 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள்  18 வயதிற்கு மேற்பட்ட பெண் ஒருவர் உட்பட  2 ஆண்கள், 18 வயதிற்கு குறைந்த 3 சிறுவர்கள் எனவும் அவர்கள் அனைவரும்  வவுனியா மற்றும் மொரவெவ  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் அனைவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!