அமெரிக்காவில் 14 வயது பள்ளி சிறுவனின் இதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு

#America #GunShoot #Death
Prasu
3 years ago
அமெரிக்காவில் 14 வயது பள்ளி சிறுவனின் இதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 14 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பென்சில்வேனியாவின் பிலடெல்பியா (Philadelphia) நகரத்தில் உள்ள ராக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் (Roxborough High School) அமெரிக்க கால்பந்து போட்டியின் பயிற்சியை முடித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் மீது பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

பள்ளியின் நுழைவு வாயிலில் செவ்வாய் கிழமை மாலை 4:42 மணிக்கு நடந்த சுமார் 69 வெடிப்புகள் கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதல் 14 வயது இளைஞன் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி மாலை 5.10 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடைபெற்றதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இந்த துப்பாக்கி சூட்டினை இரண்டு துப்பாக்கிதாரிகள் இணைந்து நடத்தி இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் இதுவரை கைது செய்யாத காவல்துறை, துப்பாக்கி சூட்டினை நடத்திய துப்பாக்கிதாரிகள் தாக்குதலை நடத்திவிட்டு கால்நடையாக தப்பிச் சென்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4