தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் மலம் கழித்த நாய் - பிரித்தானியாவில் நடந்த சம்பவம்

Prasu
1 year ago
தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் மலம் கழித்த நாய் - பிரித்தானியாவில் நடந்த சம்பவம்

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த போது, ​​தனது மகள் வளர்த்த நாய் தற்செயலாக முகத்தில் “மலம்” கழித்ததால், மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

51 வயதான அமண்டா கோம்மோ, பெல்லி என்ற நாயுடன் மதியம் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​நோய்வாய்ப்பட்டிருந்த நாய்க்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் இந்த சம்பவத்தின் போது வாயைத் திறந்து தூங்கிக் கொண்டிருந்தார், இதனால் நாயின் மலம் அவரது வாயினுள் சென்றது.

இதனையடுத்து தூக்கத்தில் இருந்து எழும்பிய அவர் குளியலறைக்கு ஓடினாள். இது குறித்து ஊகடங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த பெண், 

நான் எப்பொழுதும் செய்வது போல, பெல்லியுடன் மதியம் தூங்கிக் கொண்டிருந்தேன், திடீரென்று என் வாயில் ஏதோ இருப்பதை உணர்ந்தேன். 

நான் குளியலறைக்கு விரைந்தேன், என் மகன் குளித்துக்கொண்டிருந்தான், அதனால் நான் அதைக் கழுவுவதற்கு முன், விரைவாக (புகைப்படம்) எடுக்க எனக்கு நேரம் கிடைத்தது.  அது அருவருப்பானது.

இந்நிலையில், நான் பல மணிநேரங்களுக்குப் பிறகு  சில பாதிப்புகளை உணர்ந்தேன். என்னால் சுவையை உணர முடியாமல் இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோம்மோவின் மகள் பெல்லியை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார், அங்கு நாய்க்கு வயிற்றுப் பூச்சி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த நாளின் பிற்பகுதியில், கோம்மோவிற்கும் அதே அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இதனால் அரசர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. துணை மருத்துவர்கள் இந்த பெண்ணுக்கு வலிநிவாரணி மருந்துகளை பரிந்துரைத்தனர் மற்றும் சாத்தியமான தொற்றுநோயை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினர். 

எனினும் அவரது நோய் அறிகுறிகள் படிப்படியாக மோசமாகி, 48 மணி நேரம் கழித்து, கோம்மோவின் உடல் முழுவதும் பரவியது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நாயின் மலம் வழியாக இந்த பெண்ணுக்கு இரைப்பை குடல் நோய்த்தொற்று  இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் அந்த பெண் மூன்று நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது முதல், சொட்டு மருந்து போடும் வரை, என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை, என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

பெல்லியின் சிறிய விபத்துக்காக நான் அதை மன்னித்துவிட்டேன், இன்னும் நான் அதை முழு மனதுடன் நேசிக்கிறேன், ஆனால் எதிர்காலத்தில் நாம் எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதை நான் நிச்சயமாக கவனத்தில் கொள்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.