நிகழ்ச்சி மேடையில் தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த துருக்கி பாடகி(வீடியோ)

ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் போராட்டத்திற்கு பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது.
ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. இதுவரை 46 நகரங்களில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பரவியுள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது. ஈரான் பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு துருக்கி பாடகி ஆதரவு தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டின் பிரபல பாடகி மிலிக் மோசோ. இவர் நேற்று அந்நாட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பாடலை பாடிமுடிந்த பின்னர் நிகழ்ச்சி மேடையில் மிலிக் மோசா தனது தலைமுடியை வெட்டி ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Turkish musician Melek Mosso who had previously been targeted Turkey's government and got her concerts restricted multiple times, cut her hair on stage in solidarity with #IranProtests for #MahsaAmini. pic.twitter.com/HJjvEhX6IK
— dokuz8NEWS (@dokuz8news) September 26, 2022



