அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.09.2022

மேஷம்
அசுவினி: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.
கார்த்திகை 1: புதிய நண்பர்களிடம் ரகசியங்களை வெளியிட வேண்டாம். சங்கடம் உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.
ரோகிணி: குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2: பழைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வருவாய் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.
திருவாதிரை: பணியாளர் ஆதரவுடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். வருமானம் கூடும்.
புனர்பூசம் 1, 2, 3: முயற்சியில் இருந்த தடை விலகும். குருபகவான் அருளால் எண்ணம் நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4: முயற்சியில் சில தடைகள் ஏற்படும். சட்ட சிக்கல்களை சந்திக்க நேரலாம்.
பூசம்: குரு அருளால் சிந்தித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டியை சந்தித்தாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்
மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.
பூரம்: மற்றவரின் விமர்சனத்தை ஒதுக்கி வைத்து செயல்படுவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத செயலை உங்கள் அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: திருமணத்திற்கு வரன் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
அஸ்தம்: வங்கியில் விண்ணப்பித்த கடன் வந்து சேரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
சித்திரை 1, 2: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் கவனக்குறைவால் முயற்சி நிறைவேறாமல் போகும். நிதானம் தேவை.
சுவாதி: செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்
விசாகம் 4: வரவு அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவால் சங்கடம் அடைவீர்கள்.
அனுஷம்: உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதக நிலை காண்பீர்கள்.
கேட்டை: புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு
மூலம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
பூராடம்: தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்திராடம் 1: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியை விடாமுயற்சியால் சரிசெய்வீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும்.
திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.
அவிட்டம் 1, 2: உங்கள் அணுகுமுறையால் எதிர்பார்த்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: முயற்சி ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
சதயம்: செயலில் சிரமம் ஏற்பட்டாலும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு கூடும்.
பூரட்டாதி 1, 2, 3: வரவேண்டிய பணம் இன்று வந்து சேரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: புதிய முயற்சி இன்று வேண்டாம். செயல்கள் தாமதமாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
உத்திரட்டாதி: பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கவனம் தேவை.
ரேவதி: பணியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாவர். கவனக்குறைவால் சங்கடங்களை சந்திப்பீர்கள்.