இன்றைய வேத வசனம் 29.09.2022: சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 29.09.2022: சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்

அமெரிக்காவில் மிகப் பெரிய இறைச்சி விற்பனை செய்யும் தொழிற்சாலையில், ஒரு பெண் வேலை செய்து வந்தாள்!

ஒரு நாள் தன் ஒவ்வொரு நாள் வேலையின் ஒரு பகுதியாக, freezer அறைக்குள் ஆய்வு செய்வதற்காக சென்றாள்.

அவள் உள்ளே ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அந்த freezer அறையின் கதவு தானாக மூடிக் கொண்டது.

அந்தப் பெண் பயத்தினால் கதவுகளைத் தட்டினாள், கத்தினாள் ஆனால் யாருக்கும் அவள் குரல் கேட்கவில்லை.

அது வேலை செய்யும் அனைவரும் தன் வேலையை முடித்துக்கொண்டு, வீடு செல்லும் நேரமாக இருந்த படியால் அந்த பெண் உள்ளே இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

5 மணி நேரத்திற்குப் பின்பு, அந்தப் பெண் மரண விழும்பில் இருக்கும் போது, அங்கு பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி வந்து freezer கதவை திறந்தார்.

அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அந்தப் பெண்ணும் தேவ கிருபையால் உடல்நலம் தேறினாள்.

அந்த பாதுகாப்பு அதிகாரியிடம், நான் உள்ளே இருப்பது எப்படி தெரியும்? என்ற என்று அந்தப் பெண் கேட்ட பொழுது. நீங்கள் காலையில் வரும் பொழுது எனக்கு காலை வணக்கம் சொல்வீர்கள்! மாலையில் வேலை முடிந்து செல்லும் பொழுது இரவு வணக்கம் சொல்லி செல்வீர்கள். எத்தனையோ நபர்கள் இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுதும் நீங்கள் மட்டுமே என்னை நேசித்து தினமும் என்னை வாழ்த்தி செல்வீர்கள்.

எனவே அன்றும் நீங்கள் என்னை காலையில் என்னை வாழ்த்திச் சென்றீர்கள் ஆனால் மாலையில் வேலை முடிந்து நீங்கள் வராததை அறிந்து ஏதோ சம்பவித்து இருக்குமோ என்று பயந்து நான் உள்ளே வந்து ஆராய்ந்த பொழுது நீங்கள் freezer அறைக்குள் நீங்கள் பூட்டப்பட்டிருந்தீர்கள் என்றாராம்.

இந்தக் கதையை வாசிக்கும் அன்பான தேவ ஜனமே! உங்களை சுற்றி இருக்கும் நபர்களை நீங்கள் நேசிக்கிறீர்களா? அன்பு செலுத்துகிறீர்களா?.அல்லது உங்கள் அக்கம் பக்கத்தினரிடம் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்!

இந்தக் கதையில் வரும் பெண் தன்னை சுற்றி இருந்தவர்களை நேசித்த படியால் இந்த ஆபத்தில் இருந்து காப்பாத்தபட்டாள்.

இதை தான் வேதமும் போதிக்கிறது, ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். (ரோமர் 13:8).

எனவே, நாம் ஒருவரை ஒருவர் நேசித்து அன்பு செலுத்தி கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவோமாக. ஆமென்.

பேதுரு 1:22
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!