இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் கவனம்

Prathees
1 year ago
இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் கவனம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றில் கலந்து கொண்ட போது இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படலாம் அல்லது அத்தியாவசியமானவை அல்ல என்ற அடிப்படையில் குறித்த பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோரிக்கைகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்ளுர் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் கையிருப்பைப் பாதுகாப்பதற்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.