ஆடைகள் மற்றும் தொழில் துறை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம்

Kanimoli
1 year ago
 ஆடைகள் மற்றும் தொழில் துறை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம்

இலங்கையில் 4வது காலாண்டில் ஆடைகள் மற்றும் தொழில் துறை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியே இதற்கு பிரதான காரணம் என அந்த சம்மேளனத்தின் பொது செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ (Dhammika Fernando) தெரிவித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்தில் அமையப்பெறாத சிறிய மற்றும் நடுத்தர ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்றுரை ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன.  

இந்நிலையில், 15 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், சில நிறுவனங்கள் உற்பத்தியை கைவிட்டுள்ளதாகவும் சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சம்மேளனத்தின் பொது செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.