நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் அரச அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாகும் - அரசாங்கம்

Kanimoli
1 year ago
நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் அரச அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாகும் - அரசாங்கம்

நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் அரச அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் அரச அதிகாரிகள் கருத்துக்கள் வெளியிடுவது தொடர்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாபன விதிக்கோவையினை பின்பற்றாமல் அரச உத்தியோகத்தர் ஒருவரினால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 04/2015 இன் 3 ஆம் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படும் குற்றமாகும்.

மேலும் தாபன விதிக்கோவையின் முதலாம் தொகுதியின் 32 ஆம் அத்தியாயத்தின் முதலாம் பிரிவுக்கமைய அரசியல் உரிமைகளை உரித்தில்லாத உத்தியோகத்தரினால் மேற்கொள்ளக்கூடாத செயலோன்றினை அரசியல் உரிமைகளைப் பிரயோகிக்க உரித்தில்லாத உத்தியோகத்தரினால் சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்வதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குரிய குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மேற்குறித்த குற்றங்களை இழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.