வார இறுதியிலும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு!

Reha
1 year ago
வார இறுதியிலும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு!

நாட்டில் வார இறுதியில் (1, 2) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சிமுறையில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், ஞாயிற்றுக்கிழமை ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.