பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் கனடாவில் தியேட்டர் ஒன்றிற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்

Prasu
3 years ago
பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் கனடாவில் தியேட்டர் ஒன்றிற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் என்னும் தமிழ் திரைப்படம் திரையிடப்பட இருப்பதையொட்டி, அந்த திரையரங்குக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அந்த திரையரங்கு குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியான Jeff Knoll என்பவர், ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எங்கள் வேலையை எப்படி செய்வது, என்ன படத்தை வெளியிடுவது, என்ன மொழி படங்களை வெளியிடுவது என எங்களுக்குச் சொல்ல விரும்பும் கிரிமினல்களின் மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அடிபணியப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் Jeffஇன் Film.Ca Cinemas என்ற திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்படி புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வார இறுதி நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் Film.Ca Cinemas திரையரங்குக்கு பலத்த பொலிஸ் காவல் போடப்பட உள்ளது.

எங்கள் தமிழ் நண்பர்களுக்கும், அயலகத்தாருக்கும் ஆதரவாக நாங்கள் நிற்போம் என்று கூறியுள்ள Jeff, தமிழோ, ஆங்கிலமோ, எந்த மொழித் திரைப்படமானாலும் சரி, யார் திரைப்படங்களைப் பார்க்கவந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, பிப்ரவரி மாதத்தில் இதே திரையரங்கிலும், Burlington மற்றும் Waterlooவிலுள்ள திரையரங்குகளிலும் Bheemla Nayak என்னும் திரைப்படம் திரையிடப்பட்டபோது, சிலர் திரைப்படம் திரையிடப்படும் திரையைக் கிழித்து கலாட்டா செய்தது குறிப்பிடத்தக்கது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4