குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி
Prathees
2 years ago

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் பாசத்துடன் நடத்தும், பார்க்கும் மற்றும் செயல்படும் யுகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக வரம்பற்ற தியாகங்களைச் செய்த வயோதிபர் சமூகத்தைப் போன்று சிறுவர்களின் அழகிய குழந்தைப் பருவத்தை பேணிக் காப்பது கடமையாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று கொண்டாடப்படும் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



