இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Mayoorikka
1 year ago
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கையில் அனுமதி பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி கடிதம் மூலம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கு வழங்கப்படும் விசேட வட்டியை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் முடிவின்படி சிரேஷ்ட பிரஜைகள் கணக்குகளுக்கான விசேட வட்டி வீதம் இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட தீர்மானமொன்றையும் எடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வட்டி வீதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு வட்டி வீதம் 14.5 வீதமாகவும், கடன் வட்டி வீதம் 15.5 வீதமாகவும் காணப்படுகின்றது.