வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க ‘அம்மான்’ படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளது

Kanimoli
1 year ago
   வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க ‘அம்மான்’ படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளது

   வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க ‘அம்மான்’ படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

எமது கட்சியின் தலைவர் கடந்த வாரம் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, முன்னாள் போராளி ஒருவருக்கு உதவி திட்டம் வழங்கி வைத்திருந்தார். அந்த நிகழ்வில் ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக இளைஞர்களின் கையில் எமது நாட்டின் வளர்ச்சி ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் அம்மான் படையணி என்னும் ஒரு அமைப்பை உருவாக்க இருக்கின்றோம் என்றார்.

அதற்குரிய தலைமை பொறுப்பை என்னிடம் அளித்திருக்கின்றார். இந்த அம்மான் படையணி என்பது உலகம் முழுவதும் விரிவடைந்து வளர்ச்சி அடைந்து வருகின்றது .

 பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆதரித்துள்ளார்கள் . கண்டிப்பாக நமது இலக்கினை இன்னும் சில மாதங்களில் இலக்கினை அடையக் கூடியதற்கான வேலைத்திட்டத்தை கொண்டு செல்கின்றோம்.

எதிர்வரும் தைமாதமளவில் பாரிய வேலை திட்டம் ஒன்றினை வடக்கு கிழக்கு பகுதியிலே மேற்கொள்ள உள்ளோம். கருணா அம்மானின் நெறிப்படுத்தலில் இந்த நடவடிக்கை இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.