வரி உயர்த்தப்பட்டாலும் வருமான அதிகரிப்பு போதாது - இராஜாங்க நிதியமைச்சர் அறிக்கை

Prathees
2 years ago
வரி உயர்த்தப்பட்டாலும் வருமான அதிகரிப்பு போதாது - இராஜாங்க நிதியமைச்சர் அறிக்கை

நாட்டில் மது விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பு மற்றும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வரி வருமானம் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்க வருமானத்தில் எதிர்பார்த்த அளவு அதிகரிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நெத் நியூஸ் ரது கட்ட அம்சத்துடன் இணைந்த போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

அத்துடன், 11.25 வீதமாக காணப்பட்ட தொலைத்தொடர்பு வரியானது, 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி  1ம் திகதியிலிருந்து   2.5 வீத சமூக பாதுகாப்பு வரி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!