மிகக் குறைந்த ஒக்டேன் கொண்ட பாரிய அளவிலான பெற்றோல் சேமிக்கப்பட்டுள்ளது: பெற்றோலிய பொது ஊழியர் சங்கம்
Prathees
2 years ago

வாகனங்களுக்கு பயன்படுத்த முடியாத மிகக்குறைந்த ஒக்டேன் பெறுமதி கொண்ட பெருமளவான பெற்றோல் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மூவாயிரம் மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான எரிபொருள் கையிருப்பு இவ்வாறு சேமிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசோக ரன்வல கூறுகிறார்.
இளவரசர்களின் நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதிப்பதற்காக தங்கள் நிறுவனங்கள் மூலம் தரம் குறைந்த கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து எண்ணெய்க் கழகம் இந்த கதியைச் சந்தித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



