சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் பல துறைகளில் கடுமையான பாதிப்பு: தொழிற்சங்கப் படை

Prathees
1 year ago
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் பல துறைகளில் கடுமையான பாதிப்பு: தொழிற்சங்கப் படை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் பல துறைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய தொழிற்சங்கப் படை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாளாந்த மின்வெட்டுகளும் நீடிக்கப்படும் என அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் எரிபொருள் பிரச்சினை ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்று மூடப்பட்டது.

கச்சா எண்ணெய் இறக்குவதற்கு டொலர்கள் கிடைக்காதமையே இந்த நிலைமைக்குக் காரணம் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அன்னியச் செலாவணி கிடைத்தவுடன் அது தொடர்பான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.