மேல் மாகாணத்தில் செயற்படும் 24 பாதாள உலகக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது -பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்

மேல் மாகாணத்தில் செயற்படும் 24 பாதாள உலகக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் தலைவர்களாக செயற்படும் 12 பேர் தற்போது டுபாயில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 24 கும்பல்களில் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை கைது செய்வதற்கான அனைத்து தகவல்களும் ஏற்கனவே அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களை கைது செய்வதற்கு மேல்மாகாணத்தில் 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தப்பியோடிய நபர்களை டுபாயில் இருந்து நாட்டிற்கு அழைத்து வருவது இராஜதந்திர ரீதியாகவும் சர்வதேச பொலிஸாரின் ஆதரவுடனும் நடைமுறைப்படுத்தப்படும் என தேஷபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.



