பேருந்தில் பயணிக்கும் பெண்களை ரகசியமாக படம் பிடித்த ஒருவர் கைது
Prathees
2 years ago

கால்சட்டைக்குள் மறைத்து வைத்து கமெரா மூலம் பெண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ் நடத்துனராகவும் பணியாற்றியவர் என பிடபெத்தர பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேகநபர் இந்தக் கமெராவை கவனமாக பொருத்தியதாகவும், இதனால் பெண்கள் தேவையில்லாமல் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிடபெத்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர். சந்தேக நபர் இன்று மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



