கடதாசி இல்லாததால் ஜனாதிபதி மாளிகை குறித்த தொல்லியல் துறை அறிக்கை தாமதம்

Prathees
1 year ago
கடதாசி இல்லாததால் ஜனாதிபதி மாளிகை குறித்த தொல்லியல் துறை அறிக்கை தாமதம்

கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை தொடர்பான தொல்பொருள் ஆய்வு அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அறிக்கையை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் இல்லாததே இதற்கு காரணம் என  தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை செப்டம்பர் மாத இறுதியில் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட இருந்தது.

இதேவேளை,  ஜனாதிபதி மாளிகை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 எனினும் நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக தொல்பொருள் பாதுகாப்புக்குத் தேவையான இரசாயனங்கள் மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொல்பொருள் பாதுகாப்பு பணிகளும் தாமதமாகி வருவதாக தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.