பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
Mayoorikka
2 years ago

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருடங்களுக்குப் பின்னர் அடுத்த வாரதொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணத்தைவிட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் குறைவான விமானக் கட்டணங்கள் வடக்கு மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



