போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம்!

Mayoorikka
2 years ago
போராட்டங்களின் போது  குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம்!

போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது ஒரு விஷேட நிலையாக கருதப்பட்டு அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இடங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் விபத்துக்கள், அடக்குமுறைகளுக்கு ஆளாக நேரிடும் எனவும், உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பிலான முதல்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு ஏதேனும் மன உளைச்சல் அல்லது அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!