கடந்த மாதம் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த செப்டெம்பர் மாதம் 29,802 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2021 செப்டம்பரில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 119% அதிகரிப்பாகும்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், 526,232 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1287.6% வளர்ச்சியாகும்.
2022 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் 946.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.