கட்டிடப் பொருட்கள் வர்த்தக நிலையத்தில்ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் பலி
மிரிஹான எந்திரேகோட்டே சந்தியில் உள்ள கட்டிடப் பொருட்கள் வர்த்தக நிலையத்தில் இன்று (11) காலை ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 63 வயதுடைய லக்ஷ்மன் சரத் குமார் என்ற நபரே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். தீ விபத்தின் போது, அவர் கடை மாடியில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அப்பகுதியில் உள்ள கடைகளில் கூலித் தொழிலாளி என்றும், உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கடைக்காரர் அவருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் உறுதியாக தெரியவராத நிலையில், கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. கோட்டே மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வு ஆய்வு கூட அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதுடன் நீதவான் விசாரணையும் நடத்தப்படவுள்ளது.