பிரியமாலியுடன் ஞானசார தேரர் வியாபாரம் செய்தாரா?

Prathees
1 year ago
பிரியமாலியுடன் ஞானசார தேரர் வியாபாரம் செய்தாரா?

நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணின் நிறுவனத்தில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர்  கலகொடஅத்தே ஞானசார தேரர் நிதி முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நாம் முற்றாக நிராகரித்துள்ளோம் என  பொதுபல சேனா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரரால்இ திலினி பிரியமாலியோ அல்லது அவ்வாறான வேறு எந்த நபர்களிடமோ அல்லது வேறு எந்த நிறுவனங்களிடமோ அத்தகைய முதலீடு செய்யப்படவில்லை என்பதையும் வலியுறுத்துகிறோம்.

குறித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

அந்த புகைப்படங்களில் கலகொடஅத்தே ஞானசார தேரருடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றதுடன் அதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புஇ உலக வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் சினிமா தொடர்பான வணிகத்திற்காக ஒரு அலுவலகம் நிறுவப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் பிரசங்கம் ஒன்றினை ஆற்றுவதற்கு திரு.இசுறு பனாதரவினால் ஞானசார தேரர் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் பிறையின் இறுதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைக் காட்டி, வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரும் பண மோசடியில் சிக்கினார் என்று அர்த்தம் சேர்க்க முயல்வது எந்தளவுக்கு நியாயமானது......?

கலகொடஅத்தே ஞானசார தேரர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும்இ இது தொடர்பில் விசாரணை நடத்தினால் எந்த நேரத்திலும் ஆதரவளிக்கத் தயார் எனவும் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.