உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுகிறது

சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கி தவிக்கும் ஆபிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் கிட்டதட்ட அடிமைகள் போன்று சீன அதிகாரிகளால் நடத்தப்படும் பல காட்சிகள், செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இதில் கொடுமை என்னவெனில், சீன அதிகாரிகளால் தாக்கப்படும் தொழிலாளர்களின், அந்தந்த நாட்டு அரசாங்கமோ, அரச அதிகாரிகளோ தமது தொழிலாளர் தரப்பில் நியாயம் இருந்தாலும் அது குறித்து எதுவும் கேட்க முடியாது என்பதுடன் சீன அதிகாரிகளுக்கு ஆதரவாகவே செயற்பட வேண்டும்.
காரணம் திருப்பி செலுத்த முடியாத கடன்களை எல்லாம் சீனாவிடமிருந்து பெற்று மீள முடியாத நெருக்கடிகளை பல நாடுகள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
எனவே சீன அரசாங்கம் கூறுவதற்கு தலை அசைப்பதை தவிர அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இது தான் சீன தற்போது மேற்கொண்டு வருகின்ற 'சீனாவின் கடன்பொறி ராஜதந்திர முறை' ஆகும்.



