இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.ஏ.என்.தௌலகல பதவி உயர்வு

Kanimoli
1 year ago
இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.ஏ.என்.தௌலகல பதவி உயர்வு

இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.ஏ.என்.தௌலகல பதவி உயர்வு பெற்றுள்ளார் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் கே.எம்.ஏ.என்.தௌலகல  கடமையாற்றியுள்ளார். 

வங்கியின் அறிவிப்புக்கு அமைய, நிதி அமைச்சரின் அனுமதியுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  

ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கே.எம்.ஏ.என்.தௌலகல இலங்கை கணக்கியல் மற்றும் தணிக்கை தரநிலை கண்காணிப்பு சபையின் தலைவராக பணியாற்றுகிறார்.

இவர் ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் வணிகப் பொருளாதாரத்தில் முதுகலை விஞ்ஞானப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பட்டய மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தில் சக உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.