இன்றைய வேத வசனம் 12.10.2022: நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 12.10.2022: நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ

நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ... அவன் புறப்பட்டுப்போனான்.  ஆதியாகமம் 12:1,4

என்னுடைய சிநேகிதி ஜேனிஸ், அவளுடைய வேலை பார்க்கும் அலுவலகத்தில், ஒரு துறையைப் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஆனால் அதைச் செய்வதற்கு அவள் பயந்தாள். தேவனிடம் ஜெபித்தாள். தேவன் அந்த பொறுப்பை ஏற்கும்படி அவளுக்கு உணர்த்தினார்.

ஆனாலும், அந்த பொறுப்பை ஏற்பதைக் குறித்த பயம் அவளிடம் காணப்பட்டது. சொற்ப அனுபவமுள்ள நான் எப்படி அந்த பொறுப்பை ஏற்பது? என்று தேவனிடம் கேட்டாள். “என்னை ஏன் இந்த ஸ்தானத்திற்கு ஏற்படுத்தினீர், நான் தோற்கப்போகிறேன்” என்று புலம்பினாள்.

பின்பாக ஒரு நாள், ஜேனிஸ் ஆதியாகமம் 12ஆம் அதிகாரத்தை வாசித்து, அதில் “நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ…அவன் புறப்பட்டுப்போனான்” என்ற ஆபிரகாமின் பங்களிப்பை அறிந்தாள் (வச.1,4). பண்டைய நாட்களில் யாரும் இது போல் செய்ததில்லை என்பதனால், இது ஒரு துணிச்சலான முயற்சி.

ஆனால் எல்லாவற்றையும் பின்னாக தள்ளிவிடும்படியும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் அறிவித்து, தன்னை நம்பும்படிக்கு தேவன் கட்டளையிட்டார். அங்கீகாரம்? உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்; ஆசீர்வாதம்? உன்னை ஆசீர்வதிப்பேன்; மதிப்பு? உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நோக்கம்? பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். அவனுடைய வழியில் ஆபிரகாம் சில பெரிய தவறுகளைச் செய்திருந்தாலும், “விசுவாசத்தினாலே ஆபிரகாம்… கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்”(எபிரெயர் 11:8).

இந்த புரிந்துகொள்ளுதல் ஜேனிஸின் இருதயத்தில் பெரிய பாரத்தை நீக்கியது. அவள் பின்பாக என்னிடத்தில் சொன்னபோது,“என்னுடைய வேலையில் நான் வெற்றிபெற்றவளாய் இருக்கக் கவலைப்பட வேண்டியதில்லை.

அந்த வேலையை நான் செய்வதற்குத் தேவன் மீது நம்பிக்கை வைப்பதில் என் கவனத்தை செலுத்த வேண்டும்.” என்று சொன்னாள். நமக்குத் தேவையான விசுவாசத்தை தேவன் அருளும்போது, நம்முடைய எல்லாவற்றிலும் அவரை நம்புவோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!