கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது!
Mayoorikka
2 years ago
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொக்குவில் பிரம்படியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது
1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய இராணுவத்தினரின் ஒப்பரேஷன் பவன் நடவடிக்கையின் மூலம் பிரம்படியில் இரண்டு தினங்களில் நடத்திய தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவு தினம் இன்றைய தினம் அப்பகுதி மக்களினால் கொல்லப்பட்ட நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்றலில் நினைவு கூரப்பட்டது
இந்திய படைகளின் தாக்குதலில் உயிரிழந்த 50 க்கு மேற்பட்ட மக்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்,