நேற்று இரவு இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
Kanimoli
2 years ago
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீடொன்றின் முன்னால் நின்ற இளைஞன் மீதே இந்தக் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மூவரே இரண்டு வாள்களால் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இது தொடர்பான விரிவான விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.