காணிகள் அற்றவர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு: அமைச்சர் டக்ளஸின் செயல்

Mayoorikka
1 year ago
காணிகள் அற்றவர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு: அமைச்சர் டக்ளஸின் செயல்

கிளிநொச்சி அக்கராயன் கரும்புத்தோட்டக் காணியை தங்களுக்கு பகிர்ந்து வழங்கியதால் தாங்கள் கஸ்ரங்களைச் சந்திக்காது வாழ முடிகின்றது என, காணியினைப் பெற்று பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். 

அக்கராயன் பிரதேசத்திற்குட்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டத்திற்கு சொந்தமான 196 ஏக்கர் வரையான காணி கடந்த 2016ம் ஆண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. 

அரச அதிகாரிகள் உள்ளடங்கிய செல்வந்தர்கள் சிலர் அதனை ஆக்கிரமித்து பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்தனர். நீண்டகாலமாக ஒரு சில தனியாரின் ஆதிக்கச் சுரண்டலில் இருந்த குறித்த காணியானது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீட்கப்பட்டு, காணிகளற்ற ஏழைக் குடும்பங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன. 

காணிகளற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாண்டு காலபோக பயிர்ச் செய்கைக்காகவும் காணிகளை தாயார்ப்படுத்தி, பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த போகத்தில் இந்தப் பகுதியில் வயற் செய்கையில் ஈடுபட்டமையால், தற்போதைய விலைவாசியை சமாளித்துக்கொள்ள, கடந்தகால விளைச்சல் உதவுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.