அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் விசா 2024 கொழும்புத் தூதரகத்தின் அறிவிப்பு

Kanimoli
1 year ago
அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் விசா 2024 கொழும்புத் தூதரகத்தின் அறிவிப்பு

  2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்துக்காக விண்ணப்பதாரர்களால் பெறப்பட்ட பிழையான தகவல்கள், பதிவு செய்வதற்கான உலகளாவிய கோரிக்கையின் காரணமாக இருப்பதாக அமெரிக்கத் தூதரகம் இன்று (12) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க dvprogram.state.gov ஐ அணுகும் போது பிழையான தகவல்கள் வந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. “பதிவு செய்வதற்கான உலகளாவிய தேவை காரணமாக பிழைகள் உள்ளன. தயவு செய்து பொறுமையாக இருங்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மேலும் கூறியுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் ஒக்டோபர் 05, 2022 அன்று விண்ணப்பங்களுக்காகத் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பன்முகத்தன்மை விசா திட்டம் 2024 க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 08, 2022 இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 க்கான பன்முகத்தன்மை விசா திட்டம் காகித உள்ளீடுகளை அனுமதிக்காது மற்றும் அதன் இணையத்தளம் https://dvprogram.state.gov வழியாக மட்டுமே விண்ணப்பங்களை ஏற்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

அதேவேளை ஒவ்வோர் ஆண்டும், பன்முகத்தன்மை விசா திட்டம் 50,000 க்கும் மேற்பட்ட தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், நிரந்தர வதிவிடத்தைப் பெற அனுமதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.