இலங்கையில் வறுமையில் வாடும் 9.6 மில்லியன் மக்கள் - பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்

Prasu
1 year ago
இலங்கையில் வறுமையில் வாடும் 9.6 மில்லியன் மக்கள் - பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்

இலங்கையில் தற்போது 9.6 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர் அத்துகோரள, 2019 ஆம் ஆண்டு நாட்டில் சுமார் 3 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளனர், அதாவது அவர்கள் வறுமையில் வாடுவதாக சுட்டிக்காட்டினார்.

"ஆனால் இந்த எண்ணிக்கை இப்போது 9.6 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது."

இலங்கையில் வாழும் மக்களில் 42 வீதமானவர்கள் தற்போது வறுமையில் வாடுவதாக தமது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையின் வறுமை விகிதம் சுமார் 26% என்று தெரியவந்துள்ளது, ஆனால் இன்னும் பலர் உண்மையில் நாட்டில் வறுமையில் வாடுகிறார்கள் என்பது தெளிவாகிறது என்று அவர் மேலும் கூறினார்