சன்மானம் வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் மூலம் 1 மோசடி செய்த நபர் ஒருவர் பொலிஸாரல் கைது
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் மூலம் 11,627,175 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கைதான சந்தேக நபர் பண மோசடி, குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஹிம்புட்டானா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.