மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்: நோர்வேயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் என அழைப்பு

Mayoorikka
2 years ago
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்: நோர்வேயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் என அழைப்பு

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின்  காலநிலை ஆலோசகராக எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எரிக்சொல்ஹெய்முடனான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப்புலிகளிற்கும் இடையிலான மோதல் காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு எரிக்சொல்ஹெய்ம் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ள மகிந்த ராஜபக்ச உள்நாட்டு மோதல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து எரிக்சொல்ஹெய்முடன் ஆராய்ந்துள்ள மகிந்த ராஜபக்ச நோர்வேயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!