இலங்கை அரச அதிகாரிகளின் இலஞ்சப் பரிவர்த்தனை: பொலிஸாரிடம் சிக்கிய இரு அவுஸ்திரேலியர்கள்
Prathees
2 years ago
இலங்கையின் உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு அவுஸ்திரேலியர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் நேற்று (11ஆம் திகதி) ஆஜர்படுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு ஆஸ்திரேலியர்களும் 61 மற்றும் 71 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது.
பல நாடுகளில் அவுஸ்திரேலிய காவல்துறை நீண்ட நாட்களாக விசாரணை நடத்திய பிறகு கடந்த மாதம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நபர்கள் 2009 மற்றும் 2016 க்கு இடையில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு 304இ000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு மேல் இலஞ்சமாக வழங்கியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிசார் தெரிவிக்கின்றனர்.