சிறையிலிருந்து உலக வர்த்தக மையத்திற்கு கைவிலங்கு இன்றி சென்ற பிரியமாலி: காரணம் இதோ...
Prathees
2 years ago
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி இன்று பிற்பகல் கொழும்பு உலக வர்த்தக நிலையத்தின் மேற்கு கோபுரத்தின் 34வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்காக அவர் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் போது அவள் கைவிலங்கு போடப்படவில்லை என்றும், காவலில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கைவிலங்கு போடுவதற்கு சட்டம் தடை விதிப்பதே காரணம் என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைக்காக இன்று மேலும் 4 இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.