நிதி மோசடி செய்பவர்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

Prathees
1 year ago
நிதி மோசடி செய்பவர்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

அதிக சலுகைகள் தருவதாக கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றுபவர்கள் சமூகத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

பல்வேறு தந்திரோபாயங்களினூடாக மக்களை தமது மோசடிகளில் சிக்க வைக்க மோசடியாளர்கள் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மோசடி செய்பவர்களிடம் சிக்காமல் இருக்கவும், முறையான நிறுவனங்களில் மட்டுமே வியாபாரம் செய்யுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

போதிய ஆதாரங்கள் இருந்தால் மாத்திரமே அந்த மோசடியாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் உட்பட பெருந்தொகையான நபர்களை ஏமாற்றிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டதையடுத்து, பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அவர் தற்போது வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தனி அறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய திலினி பிரியமாலி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று பல இடங்களுக்கு சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவற்றுள் சந்தேக நபர் கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இயங்கி வந்த அலுவலகமும் உள்ளது.