பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று (12-10-2022) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 36 வயதான கந்தசாமி கஜேந்திரன் என்பவர் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.