போசாக்கின்மையை தடுக்க 6 பரிந்துரைகள் முன்மொழிவு! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
Mayoorikka
2 years ago
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வகையில் 06 முன்மொழிவுகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்திருந்தார் என்பது குநிப்பிடத்தக்கது.