இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியீடு
கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ரமேஷ் பத்திரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, லங்கா லேலண்ட் லிமிட்டட், மட்டுப்படுத்தப்பட்ட தேசிய கடதாசி நிறுவனம், தேசிய வெங்காய நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் கீழ், கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுதவிர சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் கீழ் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கைவினைப் பொருட்கள் சபை, தேசிய கைவினைப் பேரவை உள்ளிட்ட 11 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.