கடும் எச்சரிக்கையுடன் சனத் நிஷாந்த சற்றுமுன்னர் விடுதலை

Kanimoli
1 year ago
கடும் எச்சரிக்கையுடன் சனத் நிஷாந்த சற்றுமுன்னர் விடுதலை

நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்

நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குணசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், காவல்துறைமா அதிபருக்கு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

சனத் நிஷாந்த மீது ஓகஸ்ட் மாதம் பல தரப்பினரால் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சனத் நிஷாந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதற்கமைய, கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றம், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, இன்று ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

எனினும், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“கடந்த மே மாதம் தென்னிலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை விடுவிக்க, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில நீதிபதிகள் பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சில நீதிபதிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் இந்த குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பிணை வழங்குகிறார்கள்” என்று ஓகஸ்ட் மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது சனத் நிஷாந்த கூறினார்.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி சட்டத்தரணிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.