குறைந்த வருமானம் பெறும் நாடு என்ற நிலைமைக்கு நாட்டை தரம் தாழ்த்தியமை நாட்டின் நாமத்துக்கு அவப்பெயர் – திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

Mayoorikka
1 year ago
குறைந்த வருமானம் பெறும் நாடு என்ற நிலைமைக்கு நாட்டை தரம் தாழ்த்தியமை நாட்டின் நாமத்துக்கு அவப்பெயர் – திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

குறைந்த வருமானம் பெறும் நாடு என்ற நிலைமைக்கு எமது நாட்டை தரம் தாழ்த்தியமை எமது நாட்டின் கீர்த்தி நாமத்துக்கு அவப்பெயர் என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக குறைந்த வருமானம் பெறும் நாடாக எமது நாட்டை அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகில் எந்த நாடுகளும் இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டதாக நான் அறியவில்லை.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் அவ்வப்போது பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்து இருந்தாலும்கூட அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்றளவிலேயே எமது நாடு சர்வதேச ரீதியில் மதிப்பிடப்பட்டு இருந்தது.

நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெற்ற காலத்திலும்கூட இவ்வாறான ஒரு வீழ்ச்சியை நாடு எதிர்கொள்ளவில்லை.

எனினும் துரதிஷ;டவசமாக இலங்கை அரசாங்கமே உத்தியோகப்பூர்வபற்றற்ற வகையில் குறைந்த வருமானம் பெறும் நாடாக எமது நாட்டை அறிவித்துள்ளது.

இது ஆடம்பரமான விடயமல்ல.

சர்வதேச ரீதியில் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான அறிவிப்பை விடுப்பதாக அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது உண்மையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். பல வருடங்களுக்கு முன்பிலிருந்தே பெற்றுக்கொண்ட கீர்த்தி நாமத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது.

நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்து இருக்கின்றது. எனினும் ஒருபோதும் வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலைமைக்கு எமது நாடு செல்லவில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலைமைக்கு நாடு செல்லவில்லை.