நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர் தேசிய பேரவையில் – நாமலை சாடும் முஜிபுர்

Mayoorikka
2 years ago
நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர் தேசிய பேரவையில் – நாமலை சாடும் முஜிபுர்

தகப்பனாருடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாத நாமல் ராஜபக்ஷ தற்போது தேசிய பேரவையின் திட்டங்களை வகுத்து நாட்டையே கேலிக்கூத்தாக்குகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அரசாங்கம் பொதுவான உடன்படிக்கையை முன்வைத்தால், பதவிகளைப் பெறாமலேயே இவ்வாறான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேசிய பேரவையில் நீண்டகால மற்றும் குறுகிய கால தீர்வுகளை முன்வைப்பதற்காக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதை சர்வதேச சமூகத்திற்கு காட்ட விரும்புவதாகவும், தேசிய பேரவை அத்தகைய குழு எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!